கோவை: பத்திரிகையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துபவர்கள், அவதூறாக பேசுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியனின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை அண்ணாமலை ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சி.ஜெயசந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஊட்டி தங்கராஜ், திருப்பூர் சிவக்குமார், வாளவாடி வண்ணநிலவன், முருகானந்தம், ஊட்டி ஆனந்தன், ஜி.ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பொன்.வல்லரசு சிறப்புரையாற்றி தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1) கோவை மாவட்ட பத்திரிகையாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சலுகை விலையில் வீட்டு மனை வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், அதற்கு பெரும் முயற்சி மேற்கொண்ட உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது.
2) விடுபட்ட தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு கோவையில் விரைவில் சலுகை விலையில் வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
3) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு விரைவில் சலுகை விலையில் வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது.
4) பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க ஆவண செய்த தமிழக அரசுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொண்டு நலவாரியத்தில் முறையாக பதிவு செய்து தமிழகம் முழுவதும் செயல்படும் மாநில சங்கங்களுக்கு வாரியத்தில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பது.
5) தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் அங்கீகார அட்டை(Accreditation Card)வழங்கும் கமிட்டியில் கடந்த காலங்களில் சென்னையில் இருப்பவர்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது போல் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது
6) 2020ம்ஆண்டுக்கான பத்திரிகையாளர்களுக்கான அங்கீகார அட்டை(Accreditation Card) வழங்கும் பணியில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு அங்கீகார அட்டை பெற்ற அனைவருக்கும் அங்கீகார அட்டை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
7) ஜனநாயகத்தின் 4&வது தூணான பத்திரிகை துறை மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுபவர்களின் எண்ணிக்கையும், தாக்குதல் நடத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கும் வகையில் செயல்படும் இதுபோன்ற சமூக விரோதிகளை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுகிறது.
8) ஊடகத்துறையினர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அருவருக்கத் தக்க வகையில் பேசிய தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டிப்பதுடன் அவர் மீது தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் தமிழ்நாடு பிரஸ் எப்ளாயீஸ் யூனியன் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பொதுக் குழு அங்கீகாரம் அளிக்கிறது.
9) பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி சேர்க்கையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிதாக தேர்வுசெய்யப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு இக்கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முடிவில் கோவை மாவட்ட செயலாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.