திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் திறப்பு!

திருப்பூர்: திருப்பூா் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் இன்று காலை திறக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூா் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம் இன்று காலை திறக்கப்பட்டது.



இந்த நீதிமன்றத்தை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெயந்தி இந்த புதிய நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.



திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருப்பூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம், திருப்பூர் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் ஏற்கெனவே பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் இந்த குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளது.



மேலும், வரும் காலங்களில் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நடைபெறும் என்று பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் மாவட்ட நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...