சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்க ஆனைமலை புலிகள் காப்பக சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா - வனத்துறையினர்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் சோதனை சாவடிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் சோதனை சாவடிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.



வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் யானை, புலி, கரடி, மான், சிறுத்தை, காட்டு மாடு என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், சோதனை சாவடிகள் ஆழியாறு, அட்டகட்டி, டாப்சிலிப், சேத்துமடை, கவர்க்கல், சிறுகுன்றா, சின்னக்கல்லார், சோலையார் அணை, காடம்பாறை, மானாம்பள்ளி, கேரளா எல்லையான மழுக்குப் பாறை பகுதிகளில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கவும் வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி சோதனை சாவடிக்கு இரண்டு கண்காணிப்பு கேமரா விதம் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.



மேலும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது வன சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...