பல்லடம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது ; 85 பவுன் நகை மற்றும் 11 லட்ச ரூபாய் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த வழக்கில் ராஜஸ்தானில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 85 பவுன் நகை மற்றும் 11 லட்ச ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த வழக்கில் ராஜஸ்தானில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 85 பவுன் நகை மற்றும் 11 லட்ச ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் கடந்த மாதம் 23ம் தேதி ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 600 பவுன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்பி தலைமையில் 11 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. 

தனிப்படை போலீசார் விசாரணையின் போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட அணியில் சிங் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கள்ளிப்பாளையம் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை அரியானா மாநிலத்தில் இருந்து தனிப்படை போலீசார் பல்லடம் அழைத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து அனில் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 6 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொள்ளையடித்து விட்டு அனந்தபூர் சென்ற போது அங்கிருந்த ராமகிருஷ்ணன் ஆச்சாரி மற்றும் ராமன் ஜி அப்பா என்பவர்களிடம் கொள்ளையடித்த நகைகளை விற்பனைக்காக கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் நகையை விற்பதற்காக அவர்கள் இருவரும் சேலம் வந்ததை அறிந்த தனிப்படையினர் அவர்கள் இருவரையும் சேலத்தில் வைத்து கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 85 பவுனை மீட்டனர்.

மேலும் இந்த வங்கி கொள்ளையில் ராஜஸ்தானை சேர்ந்த இசார்கானுக்கு தொடர்பு இருப்பதாக அனில் சிங் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்ததின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். அங்கு இசார்கானை கைது செய்து அவனிடம் இருந்த 11 லட்சத்து 12 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இசார்கானை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாஜிஸ்டிரேட் உத்தரவுடன் திருப்பூர் அழைத்து வர உள்ளனர்.

இதனிடையே அனில் சிங்கின் 6 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை நிறைவடைந்த நிலையில் தனிப்படை போலீசார் மீண்டும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரை இன்று டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...