துணை இராணுவ பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சமூகப் பாதுகாப்பு பயனான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் - எம்.பி பி.ஆர்.நடராஜன்

கோவை: இமயமலை பனிச்சிகரத்தில் இந்திய நாட்டின் எல்லையை இரவு பகல் பாராமல் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு பயனான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், என மக்களவையில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை: இமயமலை பனிச்சிகரத்தில் இந்திய நாட்டின் எல்லையை இரவு பகல் பாராமல் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு பயனான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், என மக்களவையில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 377 விதியின் கீழ் கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் பேசுகையில், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல துணை இராணுவ பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சமூகப் பாதுகாப்பு பயனான ஓய்வூதியம் கிடைப்பதில்லை. 

தேசத்தின் பாதுகாப்பில் ஆபத்தான மற்றும் பொறுப்பான வேலையே துணை ராணுவ சேவை தான்.இரவு பகல் பாராமல் இமயமலை பனிப்பாறைகள் உள்ளிட்ட எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் பார்க்க கூட அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவதில்லை.

மேலும் துணை இராணுவப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு சிவில் சர்வீஸ் ஆட்சேர்ப்பிலும், முன்னாள் படைவீரர்களின் ஒதுக்கீடும் கொடுக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் அதிக எண்ணிக்கையில் உயர் தகுதிகளுடன் இருக்கும் இளம் தலைமுறையினரோடு போட்டியிட வேண்டிய நிலை வருகிறது. துணை ராணுவத்தினர் பணிக்காலத்தில் இந்திய நாட்டிற்கு அர்ப்பணிப்போடு வழங்கிய தியாகத்தையும் விசுவாசத்தையும் கருத்தில் கொள்ளும்போது இது ஒரு வகையான பாகுபாட்டினை காட்டுவதாக உள்ளது.

எனவேஇந்த துணை இராணுவப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயரால் வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகையானது போதுமானதாக இல்லை. இவர்களது குடும்பத்தாருக்கும் எந்த ஒரு சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்காக, இவர்களது சிறப்பான சேவைகள் அரசாங்கத்தினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.

மனிதாபிமான அடிப்படையில் துணை இராணுவத்தினரின் துணிச்சலையும், தியாகத்தையும் கருத்தில் எடுத்து கொண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் மற்ற மூன்று சேவைகளுக்கும் வழங்கப்படுவதைப் போல் சமூகப் பாதுகாப்பு பயனாக பழைய ஓய்வூதிய திட்டத்தை இவர்களுக்கும் இவர்களது குடும்பத்தார்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனமத்திய ராணுவ அமைச்சரிடம் மக்களவையில் எம்பி பி.ஆர்.நடராஜன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...