கோவை: கொரானா வைரஸ் காரணமாக வால்பாறை சாலக்குடி சாலையில் கேரள எல்லை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். கொரானா வைரஸ் காரணமாக வால்பாறை சாலக்குடி சாலையிலுள்ள கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் வாளைச்சால் ஆறு ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களை நேற்று முதல் கேரள அரசு மூடியுள்ளது.

தொடர்ந்து இன்று முதல் கேரளாவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த வால்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்த கேரள வனத்துறை தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கேரள தமிழக எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதனால் மழுக்கப்பாறை சோலையார் அணை மற்றும் வால்பாறை பகுதிகளில் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வால்பாறையில் உள்ள காட்டேஜ்கள், ஹோட்டல்களில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.