கோவை: ஆனைக்கட்டி பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை வரும் 26ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவலால் கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பு பணி மற்றும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, எல்லைப் பகுதிகளில் இருந்து நகர்புறங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக வெளியான ரகசிய தகவலின் பேரில் போலீசார் தணிக்கைச்சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 5.30 மணியளவில் கேரளாவில் இருந்து ஆனைக்கட்டி வழியாக கோவை வரும் அரசு பேருந்தை ஆனைக்கட்டி வனத்துறை தணிக்கைச்சாவடியில் சோதனை மேற்கொண்ட கியூ பிரிவு போலீசார் பேருந்துக்குள் இருந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் மார்ச் 26ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.