எனக்கு முதல்வர் பதவியே வேண்டாம்..! என் ரத்தத்தில் அந்த ஆசை இல்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

என் ரத்தத்தில் முதல்வர் ஆசை இல்லை என்றும் தான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார் எனவும் தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.


என் ரத்தத்தில் முதல்வர் ஆசை இல்லை என்றும் தான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார் எனவும் தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நீண்ட ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :-

"கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமைதான் நம் கட்சியில் இருக்கும். கட்சிக்கு என ஒரு குழுவை நியமித்து அவர்கள் சொல்வதை ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்த வேண்டும். ஆட்சிப் பதவி என்பது சிஇஓ பதவி போன்றது.

ரஜினி ஆட்சிக்குத் தலைவரா? அல்லது கட்சித் தலைவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் பதவி குறித்து நான் எப்போதும் நினைத்ததே கிடையாது. முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது. சட்டப்பேரவையில் உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் ரத்தத்தில் அது வரவே இல்லை.

1996-ம் ஆண்டிலேயே என்னைக் கேட்டனர். மூப்பனார், சோ, சிதம்பரம் என எல்லோரும் கேட்டனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருப்பதற்கான வாய்ப்பு இது, வாருங்கள் என்றனர். நான் ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான்.

நான் கட்சித் தலைவராக இருப்பேன். முதல்வர் பதவியில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையா அமர வைக்கப் போகிறோம்? வேட்பாளர்களாக தேர்தலில் நிற்கப் போகிறார்கள். அப்போது ஒவ்வொருவரின் தகுதி என்னவென்று தெரிந்துவிடும். மக்களுக்குத் தெரியாதா? அவர்களுள் நல்லவர், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர், மக்களிடத்தில் அன்பு கொண்டவர், தன்மானம் உள்ளவரைத் தேர்ந்தெடுத்து அவரை முதல்வர் பதவியில் அமர வைப்போம்.

எதிர்க்கட்சியாக வந்தால்கூட குறைகளை முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். முதல்வரின் அன்றாடப் பணிகளில் கட்சித் தலைமை தலையிடாது. கட்சி ஆட்கள் யாரும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது. மற்ற கட்சித் தலைவர்களின் இறப்புகள், நினைவுக் கூட்டங்கள், பிறந்த நாள் விழாக்களுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் வர வேண்டும் என்ற அவசியமில்லை. அதனைக் கட்சி பார்த்துக்கொள்ளும்". இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...