கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ராஜா வால்பாறைக்கு நிரந்தர வட்டாட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர் வெங்கடாசலம் அவர்கள் கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்று விட்டார். இருப்பினும், அவரே தொடர்ந்து வால்பாறைக்கு பொறுப்பு வட்டாட்சியராக பணிகளை கவனித்து வந்தார். இரு இடங்களில் பணியாற்றுவதால் வால்பாறை பகுதி மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாத நிலை இருந்து வந்தது.

இதையடுத்து, நிரந்தர வட்டாட்சியரை நியமிக்கும்படி வால்பாறை மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ராஜா அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து வால்பாறைக்கு வட்டாட்சியராக நியமித்தது.
இந்நிலையில், வட்டாட்சியர் ராஜா வால்பாறைக்கு நிரந்தர வட்டாட்சியராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரை அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.