கோவையில் 'ஊட்டச்சத்து இருவார நிகழ்வு -2020' குறித்த விழிப்புணர்வு வாகனம் - மாவட்ட ஆட்சியர்‌‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌ துறையின்‌ சார்பில்‌ “ஊட்டச்சத்து இருவார நிகழ்வு-2020” குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ திட்ட அலுவலர்‌ திருமதி.மீனாட்சி மற்றும்‌ அங்கன்வாடி பணியாளர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌ துறையின்‌ சார்பில்‌ “ஊட்டச்சத்து இருவார நிகழ்வு-2020” குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ திட்ட அலுவலர்‌ திருமதி.மீனாட்சி மற்றும்‌ அங்கன்வாடி பணியாளர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்ததாவது :-

ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குழந்தைகள்‌, கர்ப்பிணிகள்‌, வளரிளம்‌ பெண்களின்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பு‌ குறித்து பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போஸான்‌ அபியான்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2022க்குள்‌ ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்‌ ஒருபகுதியாக, விழிப்புணர்வு நிகழ்ச்சியான போஷன்‌ பக்வாடா (மார்ச்‌ 8 முதல்‌ 22 வரை) இருவார நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. “ஊட்டச்சத்திற்காக ஆண்கள்‌ - ஊட்டச்சத்து குறியீடுகளை மேம்படுத்த ஊட்டச்சத்து திட்டத்தில்‌ ஆண்களின்‌ பங்களிப்பை அதிகரித்தல்‌” என்பதை இதன்‌ கருப்பொருளாகும்‌. பெண்கள்‌ குழந்தைகள்‌ மட்டுமின்றி பெரும்பாலான வீடுகளில்‌ முடிவெடுக்கும்‌ இடத்தில்‌ உள்ள ஆண்களுக்கும்‌ இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால்‌ அளிப்பதை உறுதி செய்தல்‌, தடுப்பூசி வழங்குதல்‌, ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு வழங்குதல்‌, தன சுத்தம்‌ பேணுதல்‌, இரத்த சோகை தடுத்தல்‌, ஒவ்வொரு மாதமும்‌ எடை மற்றும்‌ உயரம்‌ எடுத்தல்‌, கருவுற்ற பெண்‌ மற்றும்‌ பாலூட்டும்‌ தாய்மார்களின்‌ ஊட்டச்சத்து நிலையை உறுதி செய்தல்‌ மற்றும்‌ குழந்தை வளர்ப்பில்‌ ஆண்களின்‌ பங்களிப்பை உறுதி செய்தல்‌ போன்ற நோக்கங்களை மையமாக கொண்டு இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போஷான்‌ பக்வாடா நிகழ்வின்‌ ஒரு பகுதியான அனைத்து மக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று ஊட்டச்சத்து பிரச்சார வாகனம்‌ கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம்‌ கோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை, அன்னூர்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, பேரூர்‌, செல்வபுரம்‌, சிங்காநல்லூர்‌, சாய்பாபாகாலனி, கணபதி, மதுக்கரை, தொண்டாமுத்தூர்‌, பொள்ளாச்சி, சூலூர்‌, சுல்தான்பேட்டை, சர்க்கார்சாமக்குளம்‌ ஆகிய பகுதிகளில்‌ இன்று முதல்‌ மார்ச்‌ 22 வரை ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும்‌. என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...