கோவை: கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊதியம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 30க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் முப்பதுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஊதியம் குறித்து கேட்டால் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்த பணியாளர்கள், தற்போது எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலுவையில் உள்ள அரியர்ஸ் மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும், கூடுதல் பணி நேர ஊதியம், வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.