கோவையில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து காவல்துறை இயக்குனர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்!

கோவை: கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவையில் இந்து முன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டது, இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் தாக்கப்பட்டது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் கோவை மாவட்டம் பதட்டமான சூழலில் உள்ளது.

இந்த நிலையில், தொடரும் பிரச்சனைகளால் அசாதாரண சூழல் நிலவி விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று விமானம் மூலம் கோவை வந்த காவல் துறை இயக்குனர் திரிபாதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக செயல்பட்டு வந்த வெற்றிச்செல்வன் தற்போது தற்காலிகமாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக இருந்த சந்திரசேகர் சிறப்பு நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...