நீலகிரி: உதகையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நீர்வள மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை சார்பில் கிராம அளவிலான நிலத்தடி நீர் மேலாண்மை திட்டம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உதகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் ஜல்சக்தி நீர்வள அமைச்சகத்தின் விஞ்ஞானிகள் ஆறுமுகம் ராஜராஜன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடையே மழை நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் குறித்த விளக்கங்களை கூறினர்.

நிகழ்ச்சியில் உதகை நகராட்சி ஆணையாளர் பேசுகையில், நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நிலத்தடி நீரின் தன்மை மற்றும் நிலத்தடி நீரின் அளவு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீர் சேமிப்பை உபயோகப்படுத்தும் விதத்தை நாம் எவ்வாறு கையாண்டு அதை சேமிக்க வேண்டும் என கலந்துகொண்ட பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களும் நீர் சேமிப்பு மற்றும் நீர் சிக்கனத்தை எவ்வாறு கடைபிடிப்போம் என கூறியுள்ளனர். எனவே, வரும் நாட்களில் அனைத்து பகுதிகளிலும் நீரின் அவசியத்தை உணர்ந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.