வால்பாறையில் காட்டுயானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிதியுதவி; எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்

கோவை: வால்பாறை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் காட்டுயானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு ரூ 4 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கோவை: வால்பாறை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் காட்டுயானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு ரூ 4 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தோனிமுடி எஸ்டேட்டில் கடந்த ஜனவரி மாதம் தேயிலைத் தோட்ட தொழிலாளி சுரேஷ்(22) வேலை முடிந்து வீடு திரும்பும் போது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, அன்றைய தினம் ஈம காரியங்கள் செய்வதற்காக ரூ 50 ஆயிரம் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு ரூ 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினரிடம் நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியின் போது, மீதமுள்ள ரூ 3.5 லட்சத்திற்கான காசோலையை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், வனச்சரகர்கள் காசிலிங்கம், நவீன் மற்றும் இறந்த சுரேஷ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...