கோவை: கோவை மாவட்டம், ப்ருக்பில்டு அருகிலுள்ள இந்திய மருத்துவ சங்க கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அசோகன், இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, இந்திய மருத்துவ சங்க செயலாளர் ரவிக்குமார், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்ததாவது ;-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர்களின் அறிவுரையின் படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலையங்களில் கொரோன வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியாகும். சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் இதுவரை பாதிப்பு யாருக்கும் இல்லை. கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய் அறிகுறிகள், நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், குறித்து விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே சுகாதாரத் துறை, மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நோயின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வும், ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இந்நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாக பரவுகிறது. மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுதும் கைகள் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது.
வரும் முன் காக்கவேண்டும் என்பதற்கிணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தினமும் சுமார் 10 முறை சோப்பு போட்டு, நன்கு கைகளை தேய்த்து கழுவவேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். இருமல், சளி, ஜலதோசம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்கவேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் குறித்த விபரத்தினையும், நோயாளிகள் யாரும் இந்த அறிகுறியுடன் இருப்பின் உடனடியாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தகவல் தரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகள், ஒட்டல்களில் தங்கியுள்ளவர்களுக்கும், வெளிநாடுகள்,/வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி உள்ளவர்களுக்கும் இந்த அறிகுறிகள் இருப்பின் அதன் விவரத்தினையும் உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும்.
கோவை விமானநிலையத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் இதற்கென தனியாக மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு வெளிநாடுகளிலிருந்து பயணிகளை சோதனை செய்து, கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு இல்லாத சூழ்நிலை தொடர அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.