நீலகிரி: கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து குன்னூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று இரவு நேரத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நீலகிரி: கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து குன்னூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று இரவு நேரத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவையில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த இக்பால் என்பவரை சிலர் தாக்கியது தொடர்பாக அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் இரவுநேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளைக்குள் (புதன்கிழமை) தாக்கியவர்களை கைது செய்யவில்லை என்றால் மாநிலம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.