கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் அமைதி பேச்சுவார்த்தை!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆட்டோக்கள் மீது தாக்குதல், இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது தாக்குதல் என தொடர் சம்பவங்களால் பதட்டமான சூழல் நிலவுகின்றது.

இந்நிலையில், நேற்று இரவு அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், துணை ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த அமைதி பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன், கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் இஸ்லாமியர்களை தொடர்ந்து தாக்குவதும், பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு இருப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருப்பதாகவும்,இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவரிடம் தெரிவித்து இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் உறுதி அளித்து இருப்பதாக ராஜா உசேன் தெரிவித்தார்.

மேலும், நேற்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இக்பால், ஷாஜகான் ஆகியோரை தாக்கியவர்கள் "ஜெய் ஸ்ரீராம்" என முழங்கியபடி தாக்குதல் நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக தெரிவித்தார். புறநகர் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆட்சியரும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்து இருப்பதாக கூறினார்.

அதேபோல, ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெறும் "ஷாகின் பாக் " போராட்டம் தங்களது குடியுரிமைக்கான போராட்டம் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் தெரிவித்தார். இன்று இந்து அமைப்பினருடன் அமைதி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...