கோவை: அருந்ததியர் சமூக மக்களை இழிதொழில் செய்வதற்கே பிறந்தவர்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட, சீனிவாச ஐயரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி பட்டியல் இன சமுதாய அமைப்புகளின் கூட்டுக்குழுவினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகளாக உள்ளனர். இந்நிலையில், எம்.எஸ்.சி,. படித்த தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த மேனகா என்ற மாணவிக்கு கடந்த சனிக்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது. எம்எஸ்சி படித்த மாணவி துப்புரவு பணியாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், சீனிவாச ஐயர் என்பவர் சமூக வலைதளத்தில் அந்த பெண்ணை பார்த்தாலே தாழ்த்தப்பட்ட பெண்ணைபோல் தெரிவதாகவும், இது அவர்களுக்கு குலத்தொழில் தானே என்று இழிவுபடுத்தியுள்ளதாக பட்டியல் இன சமுதாய அமைப்புகளின் கூட்டுக்குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், குப்பை அள்ளவே பிறந்துள்ளதாக கூறி பதிவிட்டுள்ள சீனிவாச ஐயர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி மாநகார காவல் ஆணையர் அலுவலகத்தில் பட்டியல் இன சமுதாய அமைப்புகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.