ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கோவை: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், ஆலை நிர்வாகம் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், ஆலை நிர்வாகம் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கோவை ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆலையில் உற்பத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, பணி நேரத்தை தாண்டி பணியாளர்களிடம் அதிக உழைப்பை பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஏசிசி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும், தொழிலாளர்களின் உரிமையை கேட்டால் ஆலை நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அலவன்சை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஏசிசி அண்ணா சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் சின்னச்சாமி, ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களில் 60 பேர் தான் உள்ளூர் தொழிலாளி பணிபுரிகின்றனர் என்றும் 600 பேர் வரை வெளிமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஆலை நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆலை நிர்வாகம் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...