திருப்பூர்: பரவிவரும் கொரோனா வைரசுக்கு ஹோமியோபதியில் தடுப்பு மருந்து இருப்பதாகவும் கொரோனா மருந்து கண்டறிவது குறித்து ஹோமியோபதி, சித்தா மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்காக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் கிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவத்தில் கொரோணா தடுப்பு மருந்து இருப்பதாகவும், இதனை சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், இது போன்ற நேரங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனக்கோரி சுகாதாரத் துறையிடம் இதுகுறித்து வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். டாக்டர் கிங் முன்னாள் அரசு ஹோமியோபதி மருத்துவர், தமிழக அரசின் ஹோமியோபதி மருத்துவத் துறையின் முன்னாள் ஆலோசகராக இருந்துள்ளார்.