கோவையில் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மனு

கோவை: பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிப்பறையை சுத்தம் செய்ய கூறியதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த நிலையில், தற்போது நரசிம்மநாய்க்கன் பாளையம் புதிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு அளித்து இருந்ததாகவும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண்துடைப்பாக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்த பள்ளி ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...