கேரளா: இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், இத்தாலியிலிருந்து 3-வயதுக் குழந்தையுடன் வந்த தம்பதியினர் கேரள விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்னர், குழந்தை உள்பட மூவரும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைக்கப்பட்டுக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அந்தக்குழந்தைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இந்தியாவில் 42 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 233 பேர் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.