கோவை: கோவையில் கிரிக்கெட் மைதானத்தை மீட்டுத் தரக்கோரி சாஸ்திரி விளையாட்டு சங்கத்தினர் மட்டைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை இரத்தினசபாபதிபுரம் பகுதியில் உள்ள சாஸ்திரி மைதானம் (பரியல் கிரவுண்ட்) என அழைக்கப்படும் இந்த மைதானத்தில் காலையும், மாலையும் ஏராளமானோர் நடைபயிற்சி, கால்பந்து, கிரிகெட் என விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தின் முன்புறம் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

மேலும், மைதானத்தின் உட்புறம் தனியார் டென்னிஸ் பயிற்சியும் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு தற்காலிகமாக 36 குடிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. காலை, மாலை என தினமும் கிரிக்கெட் விளையாட வந்து செல்லும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று 300க்கும் மேற்பட்டோர் அங்கு விளையாட வருவதால் மைதானம் நிரம்பி இருக்கும்.
தற்காலிகமாக இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில் குடியேறுபவர்களின் குழந்தைகளுக்கு விளையாடும் போது அடிபட வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் எனவும், இந்த மைதானத்தை விளையாட்டிற்கு மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிரிக்கெட் மட்டைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் இது குறித்து முதல்வர் அவர்களின் பார்வைக்கு நகல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.