சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் நீதி மைய மகளிரணியினர்!

கோவை: கோவை புலியகுளம் தாமு நகர் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கோவை: கோவை புலியகுளம் தாமு நகர் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல, நேற்று விடுமுறை நாள் என்பதால் அதற்கு முன் தினமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகள், ஆடல் பாடல்கள் மற்றும் கருத்தரங்கங்கள் என நடைபெற்றது.



இந்த நிலையில், கோவையில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மையத்தின் தெற்கு தொகுதி மகளிர் அணியினர் புலியகுளம் அருகே உள்ள தாமு நகர் அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.அத்துடன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தாய்மையைப் போற்ற வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், மகளிரணி நிர்வாகிகளான சாந்தி,நாகஜோதி, சங்கீதா, உமா மகேஸ்வரி, சாந்தி, சுவிதா ஆகியோரும் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...