வால்பாறையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவையொட்டி மௌன அஞ்சலி ஊர்வலம்

கோவை: வால்பாறை தி.மு.க சார்பில் மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

கோவை: வால்பாறை தி.மு.க சார்பில் மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.



வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் புறப்பட்ட மௌன ஊர்வலம் ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் வழியாக அண்ணா திடலை வந்தடைந்தது. அண்ணா திடலில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த ஊர்வலத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் வால்பாறை நகர செயலாளர் பால்பாண்டி, ஈ.கா.பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் நிர்வாகிகள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்.குசலவன், வி.சிறுத்தை வீரமணி, கம்யூனிஸ்ட் மாணிக்கம், மோகன், பரமசிவம், ம.தி.மு.க கல்யாணி, தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...