கோவையில் உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு கண் அழுத்தநோய் விழிப்புணர்வு பேரணி

கோவை: உலக கண் அழுத்த நோய் வாரத்தை கொண்டாட கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்), ஆர்விஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடைபெற்றது.

கோவை: உலக கண் அழுத்த நோய் வாரத்தை கொண்டாட கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்), ஆர்விஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடைபெற்றது.



கண் அழுத்த நோய் ‘பார்வையின் மௌனமான திருடன்’ என்று அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் உயர்ந்த கண் அழுத்தம் கண்களின் பார்வை நரம்பை சேதப்படுத்துவதோடு நிரந்தர கண் இழப்புக்கு வழிவகுக்கும். கண் அழுத்த நோயே பார்வையின்மைக்கு இரண்டாம் முக்கிய காரணமாகும்.



உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் படி இந்தியாவில் கண் அழுத்த நோயின் பாதிப்பு 2.6 சதம் ஆகும். கண் அழுத்த நோய் இருப்பவர்களிடையே 7 சதவீதம் மட்டுமே தங்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர், மீதமுள்ள 93 சதவீதம் மக்களுக்கு தங்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதே தெரியாது. இது பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக கண் அழுத்த நோய் அமைப்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தை“”உலக கண் அழுத்தநோய் வாரம்” என கொண்டாடுகின்றனர்.



உலக கண் அழுத்த நோய் வாரத்தை கொண்டாட கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்) நேற்று ஆர்விஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

இந்த பேரணியை, சிஎஸ்ஓஎஸ் தலைவர் டாக்டர். சு. பத்மநாபன், செயலாளர் - சிஎஸ்ஓஎஸ் டாக்டர். கணேஷ் வி ராமன், சிஎஸ்ஓஎஸ் - பொருளாளர் டாக்டர்.ர.ஜே.மோரிஸ் மற்றும் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் கோவை சரக்கு மற்றும் சேவை வரி (ஆடிட்) ஆணையாளர் மீனு பிரமோத் கொடியசைத்து துவக்கிவைத்தார்.



இது குறித்து சிஎஸ்ஓஎஸ் செக்ரட்டரி டாக்டர்.கணேஷ் வி ராமன் கூறுகையில், ஒரு சாதாரண ஆரோக்கியமான கண் ஆக்வஸ் ஹ்யூமர் என்ற திரவத்தை சுரக்கிறது, அது சுரக்கும் விகிதத்திலேயே வடிகிறது. இதில் ஏற்றதாழ்வு ஏற்படும் போது கண்ணுக்குள் உள்ள அழுத்தம் அதிகரிக்கிறது, இது பார்வை நரம்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தி பார்வை இழப்புக்கு வழிவகுக்கிறது.

இன்றைய கண் அழுத்த நோய் விழிப்புணர்வு ஓட்டம் ஆரம்பத்திலேயே கண் அழுத்த நோய் அறிகுறிகளை தெரிந்து கொள்ள மற்றும் அதைக் கட்டுப்படுத்தவும் கண் பரிசோதனை என்ற ஒரே வழியை பற்றி பொதுமக்களுக்கு வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒற்றை தலைவலி கொண்டவர்கள், அடிக்கடி தங்கள் கண்ணாடிகளை மாற்றுபவர்கள், மைனஸ் பவர் லென்ஸ்களை உபயோகிப்பவர்கள், அடிக்கடி ஸ்டெராய்டுகள் பயன்படுத்துபவர்கள், மிக முக்கியமாக கண் அழுத்த நோய் கொண்ட குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள், பொதுவாக கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர். ஒரு விரிவான கண் பரிசோதனையில் கண் பார்வை சோதனை, ஒரு பிளவு விளக்கு பரிசோதனை, உள் விழி அழுத்த பரிசோதனை மற்றும் ஆப்டிக் டிஸ்க் மதிப்பீடு ஆகியவை கொண்டதாகும். இது கண் அழுத்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கும் மற்றும் சிகிச்சையையும் உறுதி செய்யும், இதன் மூலம் மீளா பார்வை இழப்பைத் தடுக்கிறது.

கண் அழுத்த நோய்க்காக கண் சொட்டு மருந்திடுதல், லேசர் மற்றும் அறுவை சிகிச்சை இழந்த நரம்பையோ அல்லது பார்வையையோ மீண்டும் பெற உதவாது. ஆனால் கண் அழுத்தத்தை குறைக்க மற்றும் ஏற்கனவே உள்ள நரம்பு மற்றும் பார்வை பாதுகாக்க உதவும் என்று சிஎஸ்ஓஎஸ் சொசைட்டி வலியுறுத்தியது. நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்டது போல் மருந்தை உபயோகப்படுத்த வேண்டும் மற்றும் மற்றும் அவர்களின் வாழ்க்கை முழுவதும் ஒரு கண் அழுத்த நோய் ஆலோசகரிடம் ஒரு வழக்கமான கண் அழுத்தநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...