வரும் 2021 ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின்களை அகற்றும் பைகள் கட்டாயம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான, சூழலுக்கு உகந்த பைகளை, 2021 ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின்களோடு சேர்த்து கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான, சூழலுக்கு உகந்த பைகளை, 2021 ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின்களோடு சேர்த்து கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புனேவில் மகளிர் தினத்தை முன்னிட்டு, சுகாதாரப்பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மக்கும் வகையிலான சானிட்டரி நாப்கின்களை அகற்றும் பைகளை நாப்கின்களோடு சேர்த்து வழங்கவேண்டும் என்று, சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் அதனை வழங்குவது இல்லை என்று தெரிகிறது. வரும் ஜனவரி 2021 முதல் நாப்கின்களோடு அவற்றை அப்புறப்படுத்துவதற்கான பைகளை சேர்த்து வழங்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராமங்களுக்கு நகராட்சி பகுதிகளில் உள்ள தூய்மை நெறிமுறைகள் தற்போது பொருந்தும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...