திருப்பூர்: திருப்பூர் அருகே குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பினர் குவிந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிய நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் சுமூகமாக கலைந்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு 5000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதே மங்கலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பொதுக்கூட்டம் முடிந்ததும் இஸ்லாமியர்கள் தர்ணா மேற்கொண்டு வரும் சாலை வழியாக இந்து அமைப்பினர் செல்ல உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து ஏராளமான இஸ்லாமியர்கள் மங்கலம் திருப்பூர் சாலையை அடைத்தவாறு குவிய துவங்கினர். இந்து அமைப்பினரும் தாங்கள் திருப்பூர் செல்லும் சாலையில் இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர் என அப்பகுதி வழியாக செல்ல வேண்டும் எனவும் எதிர்புறமாக திரண்டர். இதன் காரணமாக இரு தரப்பினரும் செல்வதற்கான வழியில் பிரச்சினை எழுந்தது. தொடர்ந்து இரு தரப்பினரும் அதிக அளவில் கூடியதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேற்கொண்டு யாரும் உள்ளே வரமுடியாத வகையில் சாலைகள் அடைக்கப்பட்டு இரு தரப்பினரிடையே போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மங்கலம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. போலீசாரின் துரித நடவடிக்கை காரணமாக பதட்டமான சூழல் தணிந்து அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.