திருப்பூர்: திருப்பூரில் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

திருப்பூர் - தாராபுரம் சாலையில், ரோட்டரி மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் ஒரு கோடி மதிப்பீட்டிலான இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையத்தை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த சேவையானது ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.