கோவையில் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அதனை பிரித்து அனுப்பும் திட்டம் துவக்கம்

கோவை: கோவை அவினாசி சாலையில் புதிதாக , மாநகராட்சி கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டத்தினை ஆட்சியர் மற்றும மாநகராட்சி ஆணையர், இன்று துவக்கி வைத்தார்.

கோவை: கோவை அவினாசி சாலையில் புதிதாக , மாநகராட்சி கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டத்தினை ஆட்சியர் மற்றும மாநகராட்சி ஆணையர், இன்று துவக்கி வைத்தார்.

கோவை அவினாசி சாலையில் அரிமா வேக்பீல்டில் நிறுவனத்தின் மூலம், கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து விழாவில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் பேசுகையில், புதிதாக அமைக்கபட்டுள்ள இந்த திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராஜாமணி முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. கோவையில் புதிய குடியிருப்பிற்கு வந்துள்ளவர்கள் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குப்பைகளை தரம்பிரித்து கொடுத்தல் மூலம் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதுடன், நமது நகரத்தையும் தூய்மையாக வைத்திருக்க உதவிகரமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார். 

மேலும், புதிய குடியிருப்பு வாசிகள் இப்பொழுது இருந்தே தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு கோவை மாநகரம் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும், எனவும் மாநாகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து விழாவில் பேசிய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராஜாமணி, கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சனைகளை அறிந்து பிரச்சனைகளைக் களைய கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்..



இதோடு கட்டுமானத் துறையில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட்டில் துறையில் உள்ளவர்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

சுற்றுச்சூழல், இயற்கை சூழல் ஆகியவற்றை பேணி பாதுகாக்கவும், மாசு இல்லாத கோவை நகரத்தை உருவாக்கிடவும் பொதுமக்கள் உள்ளிட்ட எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் அரிமா கன்ஸ்ட்ரக்சன் மற்றும் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் குமார் பேசுகையில், சுற்றுச் சூழலுக்கும், சமுதாயத்திற்கும் உண்மையாகவும், நிலையான வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளுடனும் அரிமா நிறுவனம் இவற்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். 

கழிவு மேலாண்மைக்காக டிடபிள்யுஎம்எஸ் என்ற அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் படி பிரித்துக் கொடுத்த கழிவுகளை இந்நிறுவனம் மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்லும், என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...