பிராய்லர் கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவவில்லை என நிரூபனம்; வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம்- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: கொரோனா வைரஸ்க்கு பிராய்லர் கோழிதான் காரணம் என தவறான வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், எந்தவித பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை மூலம் நீரூபிக்கப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: கொரோனா வைரஸ்க்கு பிராய்லர் கோழிதான் காரணம் என தவறான வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், எந்தவித பாதிப்பும் இல்லை என  சுகாதாரத்துறை மூலம் நீரூபிக்கப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல்வர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் 14.80 ஏக்கர் பரப்பளவில் சுமார் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.என தெரிவித்தார்.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்ததையடுத்து தற்போது விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் கூறினார்.



மேலும், உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோணா வைரசுக்கு கறிக்கோழி காரணம் எனத் தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் , ஆனால் எந்தவித அச்சுறுத்தலும்அதில் இல்லை என்பதை சுகாதாரத்துறை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...