திருப்பூர்: திருப்பூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளைபோன சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளைபோன சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வங்கியின் லாக்கரை உடைத்து 250 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் மதிப்புள்ள பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றுவந்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக அனைத்து இடங்களிலும் காவல்துறையினர்விசாரணை மற்றும் தேடுதல் பணியினை நடத்தினர்.
இந்தநிலையில் டெல்லி விமான நிலையத்தில் சந்தேகப்படும்படியான அரியானா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்து தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அனில்குமார் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை அடித்து இருப்பதும் அவரே திருப்பூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தனிப்படை போலீஸ் அவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தினர். 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிய கோரிய நிலையில், நாட்களுக்கு அனுமதி வழங்கி மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பூர் வங்கி கொள்ளையினை தொடர்ந்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.