கோவை: வால்பாறையில் உள்ள சிவபெருமான் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற மாசி மாத சனி பிரதோச பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் கோவிலில் மாசி மாத சனி பிரதோச பூஜை வெகுவிமர்சியாக இன்று நடைபெற்றது.
நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் எண்ணை காப்புடன் மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்த அபிக்ஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தினை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் வணங்கினர்.

பிரதோசத்தில் பங்கறே்ற பெண்கள் சிவபெருமானை போற்றி பாடல்களை பாடி வணங்கினர். தொடர்ந்து, சிவபெருமான் மேளதாள வாத்தியத்துடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த பிரதோச பூஜையில் வால்பாறை நகர் மட்டுமின்றி தேயிலை தோட்டப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.