சென்னை: ஓமன் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை, இந்தியாவில் 34 பேர் கொரானோ வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில, காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயதான நபர் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஒமனிலிருந்து சென்னை திரும்பினார். மருத்துவ சோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவரை சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இவரது ரத்த பரிசோதனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கும், பின்னர், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய குடும்பத்தினரையும் சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர், பாதிக்கப்பட்டு இருப்பது, இதுவே முதன்முறையாகும். இதுவரை இந்தியா முழுவதும் 34 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.