கோவை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 150 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கினை ராம் நகர் பகுதியில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளரும் மக்கள் சேவை மைய நிறுவனருமான வானதி சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புக் கணக்கு' (சுகன்யா சம்ரிதி யோஜனா) திட்டத்தை 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பத்து வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கைத் துவக்கி வீட்டுக்கு அருகில் உள்ள அஞ்சல் துறை கிளை அலுவலகத்திலோ அல்லது குறிப்பிட்ட வங்கிக் கிளைகளிலோ சேமிப்புக் கணக்கை துவங்கலாம்.
செல்வமகள் சேமிப்பு கணக்கை துவங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரிச் சான்றிதழ்,அடையாளச் சான்றிதழ் போன்றவை இதில் அவசியம். சேமிப்புக் கணக்கைத் தொடங்க, குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக்கணக்கு தொடங்கலாம்.
15 ஆண்டுக்கு பணம் செலுத்தபட்ட பின்னர் பெண் குழந்தையின் 21-வது வயதில் முதிர்வுத் தொகையைப் பெற்று கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவுடன் உயர்கல்விக்காக 50 சதவிகிதப பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.1 சதவிகித வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

செல்வமகள் சேமிப்பு கணக்கை துவக்கி வைத்த பின்னர் மக்கள் சேவை மைய நிறுவனர் வானதி சீனிவாசன் கூறுகையில்: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் முதல் இடம் வசிப்பதாகவும் தொண்டாமுத்தூர் முள்ளியம்பாளையம் கிராமம் தத்தெடுக்கபட்டு அங்கு 100 பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
கோவை தபால்துறை முதன்மை கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாக்ரே கூறுகையில்: இந்த திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 5000 மேற்பட்டோர் பேர் சேர்ந்ததாகவும் இந்த ஆண்டு இதுவரை 6500 பேருக்கு மேல் சேர்ந்து உள்ளனர் என தெரிவித்தார்.வருட இறுதிக்குள் 10000 பேர் வரை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது எனவும் 100% பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வித்ய விகாஷினி பள்ளி நிறுவனர் விசாலாட்சி ராஜகோபாலன் பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.