கோவையில் கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் 5000 உணவு பொட்டலங்கள் விநியோகம்!

கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நடத்தும் கடையடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தவிர்க்க அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நடத்தும் கடையடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தவிர்க்க அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.



இந்து முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் நஞ்சுண்டாபுரம் அருகே வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டபடி நடைபெற்று வருகிறது.

அதேபோல, கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்தும், மேலும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆட்டோ ஓட்டுநர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த போராட்ட அறிவிப்பால் உக்கடம் மீன் மார்க்கெட், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், டவுன்ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி,புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை வெளியே அமர்ந்திருக்கும் ஆதரவற்றோர், ஏழை எளிய நோயாளிகள், பலதரப்பட்ட பொதுமக்கள் என உணவுகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பினர் 5 ஆயிரம் உணவு பொட்டலங்களை தயாரித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலைய சுற்று வட்டாரம், உக்கடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வழங்க உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...