கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் 18வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

இந்த நிலையில், கோவை ஆத்துப்பாலம் பகுதியில் 18வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய இஸ்லாமிய இமாம்கள் தலையில் கருப்பு தலைப்பாகை அணிந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.