கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஏழுமரம் பனியர் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (50). இவர் வழக்கம் போல ஏழுமரம் காப்பி தோட்டத்தில் இன்று காலை 7.30 மணிக்கு சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று மாணிக்கத்தின் வயிற்றுப்பதியில் தாக்கியுள்ளது.



காட்டு யானை தாக்கியதில் மாணிக்கம் படுகாயம் அடைந்த நிலையில், அவரது குடல் வெளியே வந்துள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும், தொடர் சிகிச்சைக்காக கேளிகட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...