இந்து முன்னணி, இஸ்லாமிய அமைப்புகளின் கடையடைப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய கோவை..! ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடத்தும் இன்றைய கடையடைப்பில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க 2 ஏ.டி.ஜி.பி,.க்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடத்தும் இன்றைய கடையடைப்பில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க 2 ஏ.டி.ஜி.பி,.க்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இந்து முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் நஞ்சுண்டாபுரம் அருகே வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டபடி நடைபெற்று வருகிறது.



அதேபோல, கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்தும், மேலும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆட்டோ ஓட்டுநர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த இரு மதத்தினரின் போராட்ட அறிவிப்பால் உக்கடம் மீன் மார்க்கெட், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், டவுன்ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி, புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.



அதே நேரத்தில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கினாலும் கடையடைப்புகளின் அறிவிப்பால் பொது மக்களின் நடமாட்டம் சற்று குறைவாகவே உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கோவை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல அதிவிரைவு படையினரும் துப்பாக்கிகளை ஏந்தியபடி பதட்டமான பகுதிகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை ஏ.டி.ஜி.பி.,க்கள் ஜெய்ஹிந்த் முரளி மற்றும் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநகரில் காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட காவல் எல்லையில் சுஜித் குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணிக்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஏடிஜிபி,.க்கள் கோவையில் முகாமிட்டு கோவையின் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...