43 ஆண்டுகால திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார்.



சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார்.

திமுகவின் மூத்த தலைவராகவும், 43 ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன் (98). வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை அவர் சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று அதிகாலை 1 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அன்பழகனின் உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி, கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் ஒரு வாரம் காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும் கழக கொடிகள் ஏழு நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...