திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காட்சியின் போது சட்டரீதியான எச்சரிக்கை வாசகம் காண்பிக்க கோரிக்கை!

கோவை: திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு காட்சிகளின் போது சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு காட்சிகளின் போது சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளின் போது, 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகமும், மது அருந்தும் காட்சிகளின் போது 'மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என தணிக்கை குழு நிபந்தனை விதித்துள்ளது.

இது குறித்து கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு அனுப்பிய கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-

தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான திரைப்பட வன்முறை காட்சிகள் வரும்போது , “இது சட்டத்திற்கும் சமூகத்திற்கும் எதிரான செயல்” என்ற அறிவிப்பினை திரையிடுமாறு கோரியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறும் சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் மோசமான இடத்தில் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை சொல்லியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகங்களில் குறிப்பாக, திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை காட்சிகளின் தாக்கம், இந்த சட்டவிரோத மற்றும் நியாயமற்ற சமூக தீமையை ஊக்குவிக்கும். பார்வையாளர்களின் மனதை இவை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, காட்சிகளின் போது புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான சட்டரீதியான எச்சரிக்கைகள் திரையிடப்படுவதைப்போல, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை காட்சிகளின்போது, சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். இதனால், பார்வையாளர்களிடம் பெண்களுக்கு எதிரான எண்ணம் உருவாவதைத் தடுக்க இது ஒரு சிறிய படியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...