வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்து சாதனை!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் வழிகாட்டுதல் படி பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் வழிகாட்டுதல் படி பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கும் வால்பாறையிலுள்ள இந்த மருத்துவமனையில் இரத்த வங்கி உட்பட எவ்வித வசதிகளும் இல்லாததால் வனவிலங்குகளின் தாக்குதல் விபத்தில் காயமடைதல் சம்பவங்களுக்கு 3 மணி நேரம் மலைச்சாலையில் 64 கிலோ மீட்டர் பயணம் செய்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும் போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.



இந்த நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வினோத் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கிருஷ்ணா, மங்கையற்கரசி, ஜோதிகலா ஆகியோரின் வழிகாட்டுதல் படி பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

இக்குழுவில் மருத்துவர்கள் வினோத் M.S, மகேஷ், ஆனந்தி DGO, மஞ்சுளா M.S, முகம்மது சாதிக் MD, சுரேந்திரன் MD மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு வால்பாறை மக்கள் மருத்துவ குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...