கோவை: சசிகலாவிற்கு அரசியல் அனுபவம் உள்ளதாகவும் சசிகலா வெளியே வந்தவுடன் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் எனவும் அடுத்த வருடம் சசிகலா சிறையில் இருந்து வந்துவிடுவார் என கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
கோவை: சசிகலாவிற்கு அரசியல் அனுபவம் உள்ளதாகவும் சசிகலா வெளியே வந்தவுடன் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் எனவும் அடுத்த வருடம் சசிகலா சிறையில் இருந்து வந்துவிடுவார் என கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
தொழில் துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பி்மணியசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் பல நாடுகள் உள்ளது எனவும் இந்தியாவின் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர் எனவும் சி.ஏ.ஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என யாரும் சொல்லவில்லை என அவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்து இருக்கின்றது என கூறிய அவர், பொருளாதார அமைப்பு பலவீனமாக மோசமான நிலையில் இருக்கின்றது எனவும் நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு ஆதரவாக சோ விழாவில் பேசியதை போல பேசினால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றார்.
தமிழகத்தில் பா.ஜ.க தனியாக நின்று ஜெயிக்க முடியும் எனவும் அதை கட்சி செய்யவில்லை என தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, பா.ஜ.கவில் புதிய தேசிய தலைவர் இப்போதுதான் தேர்வு செய்து இருக்கின்றனர் எனவும் மாநில தலைவரை தேர்வு செய்ய சிறிது காலம் எடுத்து கொள்வதில் தவறில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் பெரிதாக அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த மாற்றமும் இருக்காது எனவும் அதிமுக பா.ஜ.க பேச்சை கேட்டு நடப்பதாக சொல்வதில் உண்மையில்லை என்றவர், சசிகலா வெளியே வந்தவுடன் அரசியல் மாற்றம் இருக்கும் என்றார். சசிகலாவிற்கு அரசியல் அனுபவம் உள்ளது எனவும் அவர் பின்னணியில் ஒரு பெரிய சமுகம் இருப்பதாக தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, சசிகலா இல்லாமல் அரசியல் செய்ய முடியாது எனவும் அடுத்த வருடம் சசிகலா சிறையில் இருந்து வந்துவிடுவார் எனவும் இருப்பினும் அடுத்த 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறினார்.
மேலும், சீன அதிபர் வந்து சென்ற பின் வளர்ச்சி இருக்குமா என்பதை விட, அமெரிக்கா - சீனா இடையே பிரச்சினை வந்தால் இந்தியா யார் பக்கம் நிற்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறிய அவர், இந்தியாவிற்கு சீனா நெருங்கிய நட்பு நாடாக, நண்பராக கிடையாது. ஆனால், சீனாவுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வது அவசியம் என தெரிவித்தார்.