நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

உதகை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதேபோல, கோத்தகிரியில் 11வது காய்கறி கண்காட்சி மே 2, 3 ஆகிய தேதிகளிலும், 17வது ரோஜா கண்காட்சி 8, 9, 10 ஆகிய தேதிகளிலும், கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி 22, 23, 24 ஆகிய தேதியிலும், குன்னூரில் 62வது பழக் கண்காட்சி 29, 30, 31 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.