கோவை: இந்து முன்னணி சார்பில் நாளை(சனிக்கிழமை) நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பும் நாளைய தினம் கடையடைப்பு செய்வதாக இந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: இந்து முன்னணி சார்பில் நாளை(சனிக்கிழமை) நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பும் நாளைய தினம் கடையடைப்பு செய்வதாக இந்து முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-
கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் கடந்த 4ம் தேதி குடியுரிமை பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவாக இந்து முன்னணியின் தொடர் போராட்டத்தில் பங்கேற்று விட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதலை கண்டித்தும் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், 6ம் தேதி வெள்ளிக்கிழமை தினமான இன்று கோவை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் குழப்பத்தை ஏற்படுத்த இஸ்லாமிய கூட்டமைப்பினரும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், சமுதாய பெரியோர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து முன்னணி போராட்ட தேதி மாற்றப்பட்டு சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.
இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்பதை கூறி கொள்கிறேன். அதே சமயத்தில், மீண்டும் இந்து முன்னணி போராட்ட தேதியை பின்பற்றி இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பும் நாளைய தினம் கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் இந்து முன்னணி கடையடைப்பு நடத்தும் அதே நாளில் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கின்ற இந்த இஸ்லாமிய கூட்டமைப்பை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நாளைய தினம் நடைபெறும் இந்து முன்னணி கடையடைப்பு போராட்டம் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.