கோவை: கோவையில் இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கூட்டியக்கங்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கடைகளை மூட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என கோவை மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் ஆனந்த்(33), இவர் நேற்று முன்தினம் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதலை கண்டித்து இன்று (06-03-2020) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அவ்வமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி அறிவித்திருந்தார். அதேபோல, இந்து முன்னணி அமைப்பை கண்டித்து இன்று (06-03-2020) அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டியக்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தை வரும் சனிக்கிழமைக்கு தேதி மாற்றியுள்ளனர். அதேபோல இஸ்லாமிய அமைப்பினர் தற்காலிகமாக கடையடைப்பு தேதியை மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய கூட்டியக்கங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பொதுமக்கள் யாரையும் கடைகளை மூட கட்டாயப்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.