கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தின் முன்புறம் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.
கல்லூரியிலிருந்து புறப்பட்டு காந்தி சிலை வளாகம், தபால் நிலையம், காமராஜ் நகர் வழியாக புதுத்தோட்டம் வரை சென்று திரும்பும் 6 கிலோ மீட்டர் மாரத்தானில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கார்த்திக் எம்.எஸ்.சி முதலிடமும், கௌதம் பி.காம் இரண்டாமிடத்தையும், சரவணன் பி.காம் மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றனர்.

இதே போல், கல்லூரியில் புறப்பட்டு காந்தி சிலை வளாகம் தாலுக்கா அலுவலகம் வழியாக கல்லூரி திரும்பும் 3 கிலோமீட்டர் மாரத்தானில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் புவனேஸ்வரி பி.காம் முதல் இடத்தையும், அஸ்வினி பி.ஏ இரண்டாமிடத்தையும், அஸ்வினி பி.காம் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததோடு ஓடிய மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.