கோவையில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு தீர்வுகாண கோரி சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சிறை நிரப்பு போராட்டம்

கோவை: பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் அமல்படுத்திட வேண்டும், அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு 6000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிறை நிரப்பு போராட்டம் நடைபெற்றது.



ஒருங்கிணைப்பாளர் லலிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்புடன் போக்குவரத்து வசதி செய்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் மகப்பேறு விடுப்பு உத்தரவாத படுத்திட வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பத்மநாபன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...