நாமக்கல்: நாமக்கலில் புதிதாக கட்டப்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாக தெரிவித்தார்.
நாமக்கல்: நாமக்கலில் புதிதாக கட்டப்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கியது.

இதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 117 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியும், 157 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனையும் கட்டப்பட உள்ளதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, தமிழக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின் கார் மூலம் கரூர் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேலாயுதம்பாளையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆா். விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.155.80 கோடியில் கட்டிய கட்டடம், கலைஅரங்கம், பணியாளர்கள் குடியிருப்பு, உள்ளிருப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், சிற்றுண்டியகம், சமையற்கூடம், உயா் மின்அழுத்த அறை உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் உள்ளதாகவும், தற்போது புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஆயிரத்து 650 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் தான் அதிகம் படிப்பதாக தவறான செய்தியை எதிர் கட்சியினர் பரப்புகின்றனர் றன்று குற்றம்சாட்டிய அவர், மொத்த இடங்களில் 15% மட்டுமே அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மீதி 85% இடங்களில் தமிழக மாணவர்கள் தான் படிக்கின்றனர் என்றார். மேலும், அந்த 15 சதவீதத்திலும் தமிழக மாணவர்கள் வாய்ப்பு பெறுவதாக கூறினார்.
பின்னர் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.