கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவையில் நேற்றைய முன்தினம் மர்ம நபர்களால் இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனை கண்டித்து இன்று வால்பாறை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியிலுள்ள மளிகை கடைகள். ஹோட்டல்கள், தேநீர் கடைகள் பெட்டிக்கடைகள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் பேருந்துகள், டாக்சிகள் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. இருந்தபோதிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டுள்ளனர். தபால் நிலையம். பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம் பகுதிகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.